கேரளா செல்ல வேண்டாம்: கனமழை ஆபத்து கருதி தமிழக அரசு வேண்டுகோள்
3 ஆவணி 2026 திங்கள் 11:07 | பார்வைகள் : 640
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பம்பையில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, கனமழையில் தமிழர்கள் யாரும் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, 'தமிழர்கள் கேரளா செல்வதை தவிர்க்கவும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கேரளாவில் அதிகபட்சமாக கண்ணுார் மாவட்டத்தில், 36 செ.மீ., மழை பெய்துள்ளது. பத்தனம் திட்டா, கோட்டயம், இடுக்கி, வயநாடு, ஆலப்புழா மாவட்டங்களில், 17 செ.மீ., வரை கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
இதனால், அணைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கி, கோட்டயம், வயநாடு மாவட்டங்களில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு துறையினர், மழை பாதித்த பகுதிகளில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் பெய்த மழைக்கு, எட்டு பேர் பலியானதாக, கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, காங்கிரசை சேர்ந்த கேரள முதல்வர் சதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆகஸ்ட், 1ம் தேதி பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, மின் விபத்து, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால், ஒரே நாளில் எட்டு பேர் இறந்துள்ளனர்.
'மாயமான எட்டு பேரை தேடும் பணி நடந்து வருகிறது. மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ள, 209 நிவாரண முகாம்களில், 5,792 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
' மழையின் அளவு குறைந்திருந்தாலும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்' என, தெரிவித்துள்ளார்.
உத்திரட்டாதி நட்சத்திர தினமான இன்று, கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், புத்தரிசி பூஜை நடக்கிறது. இதற்காக, நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று இரவு நடை மூடப்படும்.
அடுத்து, வரும் 16ம் தேதி நடை திறக்கப்பட்டு, 18ல் மூடப்படும். அதைத் தொடர்ந்து, 21ம் தேதி திறக்கப்பட்டு, 28ல் நடை மூடப்படும்.
தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்ல தொடங்கி உள்ளனர். பம்பை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அங்கு நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், தமிழக பக்தர்கள் பம்பைக்கு செல்வதை தவிர்க்கும்படி, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சபரிமலை மட்டுமின்றி, கேரளாவின் பிற பகுதிகளுக்கு செல்ல, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேகதாது அணை திட்டத்துக்கு ஆட்சேபனை இல்லை
மத்திய அரசு கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின், மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் சோமண்ணா கூறியதாவது: விரிவான திட்ட அறிக்கையில் உள்ள தொழில்நுட்ப குறைபாட்டை சரி செய்தால், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை. கொள்கை ரீதியில் ஒப்புதல் கிடைத்துள்ளது.
திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்த போது, தொழில்நுட்ப குறைபாடுகளை சரிசெய்யும்படி, கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகள் போல மீண்டும் நடக்காமல் தடுக்க கர்நாடகா, தமிழகம் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்த சிவகுமார் பணியாற்றுவார். கர்நாடகாவின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேகதாது அணை திட்டம் குறித்து மத்திய அரசிடம் இருந்து உறுதியான, வெளிப்படையான நிலைப்பாட்டை எதிர்பார்த்து வந்த கர்நாடக அரசுக்கு, மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் சோமண்ணாவின் பதில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire