கிரீஸில் இரண்டு உலங்கு வானூர்திகள் மோதி விபத்து - இருவர் பலி!
3 ஆவணி 2026 திங்கள் 08:23 | பார்வைகள் : 489
கிரீஸில் பரவி வரும் மிகப்பரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
02.08.2026 நடந்த இந்த விபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவரும், கிரேக்க நாட்டைச் சேர்ந்த பணியாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து நடந்த நேரத்தில் உலங்கு வானூர்திகளில் இருந்த பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவரும், மற்றொரு கிரேக்க பணியாளரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது ஐரோப்பா முழுவதும் நிலவும் கடுமையான வெப்பமான வானிலையால் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தீயணைக்கும் சவாலான நடவடிக்கைகளின் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire