Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் நடைபெற்ற பேரணியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் - 14 பேர் பலி

பாகிஸ்தானில் நடைபெற்ற பேரணியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் - 14 பேர் பலி

3 ஆவணி 2026 திங்கள் 14:06 | பார்வைகள் : 555


பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள காபல் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 03.08.2026 நடைபெற்ற அமைதிப் பேரணியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை, பொதுமக்களில் 3 பேர், அதிகாரி ஒருவர், 5 பொலிஸார் உட்பட 14 பேர் உயிரிழந்ததோடு 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொலிஸாரின் அசமந்தப் போக்கை கண்டித்தும் இந்த பேரணி நடத்தப்பட்டது.

இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவோ அல்லது நபரோ பொறுப்பேற்காத நிலையில், அங்கு பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.