Paristamil Navigation Paristamil advert login

ஜெயிலர் 2ல் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டது ஏன் ?

 ஜெயிலர் 2ல் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டது ஏன் ?

3 ஆவணி 2026 திங்கள் 14:18 | பார்வைகள் : 660


நடிகர் விஜய் சேதுபதி சமீப காலமாகவே ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து கதைகளை தேர்வு செய்கிறார். அதேசமயம் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள "ஜெயிலர் 2" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மட்டும் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் ரஜினிகாந்த் மட்டுமே என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

இது குறித்து அவர் கூறும்போது, "ரஜினிகாந்த் மீது உள்ள நன்மதிப்பு மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் ஆசை காரணமாகவே ஜெயிலர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அவரிடம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் ரஜினி மீது மட்டுமே இருக்கும் என்பதால் எனக்கு பெரிய அளவில் பிரச்னை இல்லை.

ஆனால் சிறிய மற்றும் நடுத்தர படங்களில் நான் இப்படி கெஸ்ட் ரோல்களில் நடித்தால், தயாரிப்பாளர்கள் அதை விளம்பரத்திற்காக அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் நான் நாயகனாக நடிக்கும் மற்ற படங்களின் வணிகத்தையும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் அது பாதிக்கிறது. அதனால்தான் இனிமேல் கேமியோ ரோல்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்தேன்" என கூறியுள்ளார் விஜய் சேதுபதி.