இந்திய டெஸ்ட் அணியில் இணையும் முதல் காஷ்மீர் வீரர் ஆகிப் நபி
3 ஆவணி 2026 திங்கள் 15:27 | பார்வைகள் : 450
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளஆகிப் நபி அணியில் இடம்பிடித்துள்ள முதல் காஷ்மீர் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியா கிரிக்கெட் அணி, இலங்கை சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் திகதியும், 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் திகதியும் தொடங்க உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ஏற்பட்ட இடது முழங்கால் காயத்திலிருந்து ஜஸ்பிரித் பும்ரா இன்னும் முழுமையாக குணமடையாததால், இந்த தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக அவுகிப் நபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம், ஜம்மு காஷ்மீரிலிருந்து இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கடந்த 2 ரஞ்சி கிண்ண சீசன்களில் மொத்தம் 104 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகிப் நபி, 2025-26 ரஞ்சி கிண்ண தொடரில் மட்டும் 60 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜம்மு காஷ்மீர் அணி முதல் ரஞ்சி கிண்ண பட்டத்தை வெல்ல முக்கியப் பங்கு வகித்தார்.
சமீபத்தில் இலங்கைக்கு சென்ற இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த அவர், 2 முதல் தரப் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்டார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire