பீஹார் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தல்; பிரசாந்த் கிஷோர் வெற்றி
4 ஆவணி 2026 செவ்வாய் 06:19 | பார்வைகள் : 419
பீஹாரின் பாங்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் 19,324 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாஜ தலைவர் நிதின் நபீன் ராஜ்யசபா எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொகுதிக்குட்பட்ட பங்கிபூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை 30ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், பாஜ சார்பில் நீரஜ் குமார் சின்ஹாவும், எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளராக ரேகா குப்தாவும், ஜன் சுராஜ் கட்சியின் சார்பில் பிரசாந்த் கிஷோரும் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. அதில், பாஜ, ஆர்ஜேடி வேட்பாளர்களை விட, ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் பிரசாந்த் கிஷோர் , ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றார்.
இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் 19,324 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அவருக்கு மொத்தம் 64,151 ஓட்டுகள் கிடைத்தது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜவின் நீரஜ் குமாருக்கு 44,827 ஓட்டுகளும்
ஆர்ஜேடியின் ரேகா குமாரிக்கு 14,273 ஓட்டுகளும் .
நோட்டாவுக்கு 646 ஓட்டு கிடைத்தன.
பாஜவின் கோட்டையாக இருக்கும் பங்கிபூர் தொகுதியில் 2010ம் ஆண்டு முதல் நிதின் நபீனும், அதற்கு முன்பாக அவரது தந்தை நபீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவும் இத்தொகுதியைத் தக்கவைத்து வந்திருந்தனர்.
இந்த சூழலில், இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2025ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மபி மாநிலம் தடியா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷியாம் சிங், 6,016 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவருக்கு மொத்தம் 66,757 ஓட்டுகள் கிடைத்தன.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜவின் அசுதோஷ் திவாரிக்கு 60, 741 ஓட்டுகளும் கிடைத்தன.
நோட்டாவுக்கு 456 ஓட்டு கிடைத்தது.
இந்த தொகுதி ஏற்கனவே காங்கிரஸ் வசம் இருந்தது. அதன் எம்எல்ஏ., ராஜேந்திர பாரதி, மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பதவி இழந்தார். அதன் காரணமாக நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் தடியா அரச குடும்பத்தை சேர்ந்த கன்ஷியாம் சிங், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலம் மஞ்சள்பூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜ வேட்பாளர்மஞ்சள்பூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜ வேட்பாளர் சதேந்தரபாய் படேல் 30630 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவருக்கு மொத்தம் 55,481 ஓட்டுகளும்,
காங்கிரசின் பிகாபாய் ரபரிக்கு 24,581 ஓட்டுகளும்,
நோட்டாவுக்கு 2,247 ஓட்டுகள் கிடைத்தன.
பாஜ எம்எல்ஏ., யோகேஷ் படேல் மரணத்தை தொடர்ந்து இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire