திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்
4 ஆவணி 2026 செவ்வாய் 12:41 | பார்வைகள் : 552
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நிராகரித்தனர்.
மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில், 2025 டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'வழக்கமான இடங்களை தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என, உத்தரவிட்டார். உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.
இந்த வழக்கில், தமிழக அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு ஐகோர்ட் மதுரைக் கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார் , ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது தீபம் ஏற்ற வேண்டும் என இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 03) திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்தது. தீர்ப்பு இந்தாண்டு ஜனவரி மாதம் வந்துள்ளது. இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு தரப்பில், ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கு தாமதம் ஆனதாக தெரிவித்தனர். இதை ஏற்காத நீதிபதிகள், எதிர் மனுதாரர்களை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நிராகரித்தனர்.
* தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மனுக்கள் முழுமையாக விசாரித்த பிறகு தான் எந்த முடிவும் எடுக்கப்படும்.
* தீபத்தூணில் தீபம் ஏற்ற ஜனவரி மாதம் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில் 6 மாதம் கழித்து அப்பீல் செய்வது ஏன்?
* தமிழக அரசின் மேல்முறையீடு குறித்து பதில் அளிக்குமாறு மனுதாரர் ராமரவிக்குமார், மதுரை கலெக்டர் பதில் அளிக்க சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக அரசு மனுவில் கூறியது என்ன?
தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது:
கார்த்திகை தீபம், 150 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இருக்கும் தீப மண்டபத்தில் தான் ஏற்றப்படுகிறது. தீபத்துாணில் ஏற்றப்படுவது இல்லை. கோவில் ஆவணத்திலோ, முந்தைய உத்தரவுகளிலோ, ஆகமங்களிலோ இல்லாத ஒரு வழிபாட்டு நடைமுறையை ஐகோர்ட் கண்டுபிடித்துள்ளது.
அரசியல் சட்டத்தின் 25ம் பிரிவின்படியான பக்தர்களின் வழிபடும் உரிமை என்பது, பொது கோவில்களில் பின்பற்றப்படும் சடங்கு நடைமுறைகளில் மாற்றம் செய்வதில் இல்லை. சடங்குகள், திருவிழாக்கள் போன்றவற்றில்
மத நிறுவனங்களின் சுதந்திரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது.
இவ்வாறு மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire