Paristamil Navigation Paristamil advert login

காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு: பரிஸ் வீதிகளில் குறைந்து வரும் சட்டவிரோத vélo-taxis!!

காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு: பரிஸ் வீதிகளில் குறைந்து வரும் சட்டவிரோத vélo-taxis!!

3 ஆவணி 2026 திங்கள் 21:54 | பார்வைகள் : 2320


கடந்த சில ஆண்டுகளில் பரிஸ் நகரின் வீதிகளில் நூற்றுக்கணக்கில் காணப்பட்ட சட்டவிரோத vélo-taxis எனப்படும் tuk-tuks தற்போது கணிசமாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் இலக்கு வைக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

Paris முதலாம் வட்டாரத்தில் உள்ள Place des Pyramides பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய நடவடிக்கையில், காவல்துறையினர் மூன்று குழுக்களாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறதா என்பதை கண்காணித்தன. அப்போது, vélo-taxis எனப்படும் இரண்டு tuk-tuks, மிதிவண்டிகளுக்கான ஒதுக்கப்பட்ட பாதையில் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக அல்லது இடையூறாக வாகனம் நிறுத்தப்பட்டிருப்பது போன்ற விதிமீறல் காணப்பட்டால் மட்டுமே அதிகாரிகள் சோதனை நடத்த முடியும் என சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவல்துறையினரின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளால் பரிஸ் நகரின் வீதிகளில் முன்னர் அதிகளவில் காணப்பட்ட சட்டவிரோத vélo-taxis தற்போது வெளிப்படையாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.