கடும் இடியுடன் கூடிய மழை- மின்னல் தாக்கி இருவர் ஆபத்தான நிலையில்!!
4 ஆவணி 2026 செவ்வாய் 07:44 | பார்வைகள் : 1695
Hautes-Pyrénées பகுதியில் உள்ள Pyrénées மலைத்தொடரில் 3ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கடும் இடியுடன் கூடிய மழையின்போது, சுமார் 2,700 மீட்டர் உயரத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் மீது மின்னல் தாக்கியதில், 14 மற்றும் 21 வயதுடைய இருவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 3.30 மணிக்குப் பின்னர் அவசர உதவிக்கான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மலைப்பகுதி ஜெண்டர்ம்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மின்னல் தாக்குதலுக்கு உள்ளான இருவரும் மீட்கப்பட்டு Tarbes மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் மின்னல் தாக்குதல்கள் ஒப்பீட்டளவில் அரிதானவை என்றாலும், மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகுபவர்களில் பெரும்பாலானோர் பொழுதுபோக்கு அல்லது வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். 2022ஆம் ஆண்டு வெளியான ஆய்வின்படி, ஐரோப்பாவில் கடந்த 10 ஆண்டுகளில் 215 மின்னல் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 83 பேர் உயிரிழந்ததுடன், 971 பேர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இத்தகைய விபத்துகள் அதிகம் இடம்பெறுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire