ரஷ்யக் கடற்கரையில் ட்ரோன் வீழ்ந்து வெடித்ததில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி!
4 ஆவணி 2026 செவ்வாய் 10:39 | பார்வைகள் : 588
தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடார் பிராந்தியத்தில் உள்ள அர்கிபோ-ஒசிபோவ்கா கடற்கரையில் ட்ரோன் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகள் பலர் கூடி மகிழ்ந்து கொண்டிருந்த கடற்கரையில், திடீரென அதிவேகமாக வந்த ட்ரோன் ஒன்று மலைப் பாறைப் பகுதியில் மோதி தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியுள்ளது.
இத்தாக்குதலில் காயமடைந்த 40 பேரில் 17 பேர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரோன் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் அப்பகுதியில் எவ்வித அவசர கால எச்சரிக்கை சைரன்களும் ஒலிக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது பொதுமக்கள் மீது உக்ரேன் நடத்திய திட்டமிட்ட தாக்குதல் என கிராஸ்னோடார் பிராந்திய ஆளுநர் வேனியாமிண்ட பிராந்திய ஆளுநர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக உக்ரேன் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வக் கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.
ட்ரோன் வெடிப்பதற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகச் சாட்சியங்கள் தெரிவித்துள்ளதால், ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் படையினர் ட்ரோனை சுட்டு வீழ்த்த முயன்றபோது அது திசைமாறி கடற்கரையில் விழுந்திருக்கலாம் என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றின் மீது 04.08.2026 செவ்வாய்க்கிழமை அதிகாலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பிரபல ஈ-காமர்ஸ் நிறுவனமான 'Wildberries' கிடங்குகளை இலக்கு வைத்து உக்ரேன் அண்மைக்காலமாகத் தொடர் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்ய இராணுவத்திற்குத் தேவையான உபகரணங்களை சப்ளை செய்ய இக்கிடங்குகள் பயன்படுவதாக உக்ரேன் தெரிவிக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire