பிரித்தானிய கால்வாயை கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோர் பயணப் படகில் தீ விபத்து: 157 பேர் மீட்பு!!
4 ஆவணி 2026 செவ்வாய் 16:09 | பார்வைகள் : 1849
இன்று ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது, சுமார் 160 புலம்பெயர்ந்தோர் பெரும் ஆபத்தில் சிக்கினர். பிரான்சின் Seine-Maritime பகுதியில் இருந்து புறப்பட்ட அவர்களின் படகு, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய கடல் எல்லைப் பகுதியில் தீப்பற்றியது. இதையடுத்து, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளின் மீட்புக் குழுக்கள் அவசர நடவடிக்கையில் ஈடுபட்டன.
மொத்தம் 157 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அதற்கு முன், ஐந்து பேர் ஏற்கனவே Boulogne-sur-Mer துறைமுகத்தில் கரை சேர்க்கப்பட்டிருந்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது, பயணிகள் கடலில் குதித்தனர். இருப்பினும், உயிரிழப்போ அல்லது உயிருக்கு ஆபத்தான காயமோ எதுவும் ஏற்படவில்லை.
மீட்கப்பட்டவர்களில் சிலருக்கு கடும் குளிரால் உடல் வெப்பம் குறையும் ஹைப்போதெர்மியா (Hypothermia) பாதிப்பு காணப்பட்டது. அனைவருக்கும் உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டு, அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
2018 முதல் ஆங்கிலக் கால்வாயில் நடைபெற்று வரும் சட்டவிரோதக் கடத்தல் முயற்சிகளில் இது மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும். மேலும், மனிதக் கடத்தல்காரர்கள் தற்போது முன்பைவிட பெரிய படகுகளைப் பயன்படுத்தி, அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்கிறார்கள் என்று பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire