Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகளின் எதிர்காலம் குறித்து மனந்திறந்த சூர்யா - ஜோதிகா

குழந்தைகளின்  எதிர்காலம்  குறித்து  மனந்திறந்த சூர்யா - ஜோதிகா

4 ஆவணி 2026 செவ்வாய் 16:21 | பார்வைகள் : 714


நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா தம்பதி, தங்களது திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளனர்.இதனை முன்னிட்டு, இருவரும் இணைந்து தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், குடும்ப வாழ்க்கை மற்றும் தங்களது குழந்தைகள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

இதன்போது பேசிய சூர்யா, "எங்கள் வீட்டில் திரைப்படங்கள் குறித்து அதிகமாக பேசுவதில்லை. குழந்தைகளுக்கும் சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகள் மிகவும் தெளிவான சிந்தனையுடன் வளர்ந்து வருவதாகவும், அவர்களின் எளிமையான அணுகுமுறை தங்களுக்கு பெருமை அளிப்பதாகவும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தங்களது மகள் தியா, அமெரிக்காவில் கல்லூரியில் சேர்வதற்காக தனியாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியதாகவும், அதனை முழுமையாகத் தானே திட்டமிட்டு நிறைவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
குழந்தைகளின் தனித்துவமான ஆர்வங்களையும் முயற்சிகளையும் கண்டு தாங்கள் பெருமைப்படுவதாக சூர்யா - ஜோதிகா தம்பதி தெரிவித்துள்ளனர்.