Paristamil Navigation Paristamil advert login

இயக்குனராக மீண்டும் களமிறங்கும் சசிக்குமார்!

இயக்குனராக மீண்டும்  களமிறங்கும் சசிக்குமார்!

4 ஆவணி 2026 செவ்வாய் 16:41 | பார்வைகள் : 634


சுப்பிரமணியபுரம் படம் மூலம் நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் சசிக்குமார். முதல் படத்திலேயே இரண்டிலும் ஸ்கோர் செய்தார். அதன்பின் ஈசன் என்கிற படத்தை இயக்கினார். அதன்பின் சசிக்குமார் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. முழு நேர நடிகராக மாறினார்.

கடந்த பல வருடங்களில் அவர் பல படங்களிலும் நடித்துவிட்டார். ‘எப்போது மீண்டும் படம் இயக்குவீர்கள்?’ என்கிற கேள்வி அவரிடம் தொடர்ந்து கேட்கப்பட்டு அருகிறது. இந்நிலையில், மீண்டும் இயக்குனராக களமிறங்கப்போகிறேன் என சசிக்குமார் கூறியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய சசிக்குமார் ‘வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையை வெப் தொடராக இயக்கப்போகிறேன்.. இது ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகும்.

அடுத்து ரத்னகுமார் எழுதி பாரதிராஜா இயக்கத் திட்டமிட்டிருந்த குற்றப்பரம்பரை கதையை திரைப்படமாக இயக்கப்போகிறேன். இந்த இரண்டு படைப்புகளும் அடுத்தடுத்து உருவாகும்’ என அவர் கூறியிருக்கிறார்