சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் நிர்மல்குமார்
5 ஆவணி 2026 புதன் 05:14 | பார்வைகள் : 364
வழக்கறிஞர்களின் சிரமத்தை தவிர்க்க, சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஏற்படுத்தப்படும், என, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், தொடர் சட்ட சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில், அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது:சென்னையில் பல்வேறு இடங்களில் நீதிமன்றங்கள் உள்ளதால், வழக்கறிஞர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை கருத்தில் வைத்து, அனைத்து நீதிமன்றங்களை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உருவாக்கப்படும். இந்த வளாகத்தில், 160 நீதிமன்றங்களுக்கு மேல் அமைக்கப்படும். இதற்கு, தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு, வழக்குகள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை பொருத்தவரை, கட்சி பேதமின்றி, கட்சிக்கு அப்பாற்பட்டு திறமை, தகுதியின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மக்களுக்கான இந்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக, ஒரு சில ஆண்டுகளில் தெரிய வரும். அதேபோல், வழக்கறிஞர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire