சட்டங்களை மதிக்காவிட்டால் சலுகை ரத்து? மத்திய அரசு
5 ஆவணி 2026 புதன் 09:49 | பார்வைகள் : 542
சமூக ஊடக நிறுவனங்கள், நம் சட்டங்களுக்கு பணிய மறுத்து, சட்டவிரோத மற்றும் தேச விரோத உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த தவறினால், அவர்களுக்கான பாதுகாப்பு அரண் சலுகை ரத்து செய்யப்பட வேண்டும்' என, பார்லி., நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில், சமூக ஊடகமான, 'பேஸ்புக்'கில் பிரதமர் மோடி சமீபத்தில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ திடீரென நீக்கப்பட்டது. ஐந்து மணி நேரத்துக்கு பின் மீட்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அதன் தாய் நிறுவனமான, 'மெட்டா'வின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கோர வேண்டும் என, பார்லி., நிலைக்குழு பரிந்துரைத்தது.
டில்லியில் இன்று சமூக ஊடகங்களை முறைப்படுத்துவது தொடர்பாக, தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான பார்லி., நிலைக்குழுவின் கூட்டம், அதன் தலைவரும், பா.ஜ., - லோக்சபா எம்.பி.,யுமான நிஷிகாந்த் துபே தலைமையில் நடந்தது. இதில், 'மெட்டா, கூகுள், எக்ஸ், யூ டியூப்' போன்ற சமூக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின், நிஷிகாந்த் துபே கூறியதாவது: கடந்த 2000ல், தகவல் தொழில்நுட்ப சட்டம் இயற்றப்பட்டபோது, சமூக ஊடகங்கள் ஏதும் இல்லை. அப்போது, இணைய சேவை வழங்குநர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அரண் சலுகை சட்டப்படி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது சமூக ஊடகங்களும், அந்த பாதுகாப்பு சலுகைகளை அனுபவித்து வருகின்றன.
குழந்தைகள் பாலியல் தொடர்பான துஷ்பிரயோகங்கள், பெண்களை இழிவுபடுத்தும் வீடியோக்கள் அல்லது 'ஏ.ஐ.,' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியாக்களை அகற்ற தவறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு, இந்த சட்ட பாதுகாப்பு தொடரக் கூடாது என, பரிந்துரைத்துள்ளோம்.
அரசு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான உள்ளடக்கங்களுக்கு சில சமூக ஊடக நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை உடனடியாக நீக்குவதில் சில சமூக ஊடகங்கள் அலட்சியம் காட்டுகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் என வரும்போது, அரசியல், ஜாதி, மத பாகுபாடுகளை யாரும் பார்ப்பதில்லை. மேலும், இருப்பிடத்தை மறைக்க உதவும், 'வி.பி.என்.,' சேவை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களையும் சமூக ஊடகங்கள் வெளிப்படுத்தாமல் மறைக்கின்றன.
பிரதமர் மோடியின் வீடியோ, 'பேஸ்புக்' முடக்கப்பட்டது கவலைக்குரிய விஷயம். இதற்காக, 'மெட்டா' நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்க வேண்டும்.தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்ததற்கு அவரை பாராட்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
நாடு முழுவதும் விரைவில் அமலுக்கு வரவுள்ள, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்திற்கு இணங்கும் வகையில், பயனர்களின் வயதை உறுதிப்படுத்தும் புதிய நடைமுறையை, தகவல் பரிமாற்ற செயலியான, 'வாட்ஸாப்' சோதனை ரீதியாக அறிமுகம் செய்துள்ளது.
சில பயனர்களிடம் மட்டுமே பிறந்த தேதி கேட்கும் சோதனை நடப்பதாகவும், வயது விபரத்தை வழங்காவிட்டாலும், சேவையை வழக்கம் போல தொடரலாம் என்றும் வாட்ஸாப் தெரிவித்துள்ளது. மேலும், வயது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால், பிற பயனர்களுக்கு அந்த தகவல் ஒருபோதும் பகிரப்படாது என்றும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire