பங்கிபூர் இடைத்தேர்தல் முடிவு எதிரொலி: பிரதமர் மோடி- நிதிஷ்குமார் சந்திப்பு
5 ஆவணி 2026 புதன் 11:57 | பார்வைகள் : 462
பார்லிமெண்ட் வளாகத்தில் பிரதமர் மோடியை, பீஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். பங்கிபூர் இடைத்தேர்தல் தோல்விக்கு பின்னர் நடைபெற்ற இந்த சம்பவம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பீஹார் மாநிலத்தில் பாஜவின் கோட்டையான கருதப்படும் பங்கிபூரில் நிதின் நபின் எம்எல்ஏவாக இருந்தார். அவர் பாஜ தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, ராஜ்ய சபா எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் காரணமாக பங்கிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
பங்கிபூர் தொகுதியை, ஜன் சுராஜ் கட்சி இடைத்தேர்தலில் கைப்பற்றியது. அந்த தொகுதியின் வேட்பாளரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். தொகுதியை பாஜவிடம் இருந்து கைப்பற்றிய நிலையில், பாஜ கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான நிதிஷ்குமார், பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளார்.
பார்லிமெண்ட் வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. சந்திப்பின் போது மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங், ராஜ்யசபா எம்பியும், ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவருமான சஞ்சய்குமார் ஜா ஆகியோர் உடனிருந்தனர்.
பார்லி. வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறைக்குச் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக நிதிஷ் குமார் கூறினார். இந்த சந்திப்பு குறித்து பீஹார் மாநில பாஜ அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில், தற்போதைய நிலைமையில் இருக்கும் சமகால பிரச்னைகள் குறித்து பேசப்பட்டன. நிதிஷ் குமாரின் அனுபவம், வழிகாட்டுதல் எப்போதும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire