ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டின் பாகம் நிலவில் மணிக்கு 5,400 மைல் வேகத்தில் மோதியது!
5 ஆவணி 2026 புதன் 11:49 | பார்வைகள் : 455
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட்டின் கைவிடப்பட்ட மேல் பகுதி இன்று 05.08.2026 புதன்கிழமை நிலவின் மேற்பரப்பில் மணிக்கு 5,400 மைல் (மணிக்கு 8,690 கி.மீ) வேகத்தில் திட்டமிடப்படாத வகையில் மோதியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அயர்லாந்து நேரப்படி இன்றைய தினம் காலை 7:35 மணிக்கு (இலங்கை நேரப்படி மதியம் 1:05 மணியளவில்) நிலவின் வட அரைக்கோளத்தில் உள்ள ஈன்ஸ்டீன் பள்ளத்திற்கு அருகில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.
கடந்த 2025 ஜனவரியில் இரண்டு நிலவுக் கலன்களை விண்வெளிக்கு ஏந்திச் சென்ற பால்கன் 9 ரொக்கெட்டின் 4 தொன் எடையுள்ள மேல் பகுதியே இவ்வாறு மோதியுள்ளது.
திட்டமிடப்பட்ட பணி நிறைவடைந்த பின்னர், விண்வெளியில் வீசப்பட்ட கதிர்வீச்சு, சூரியனின் கதிர்வீச்சு மற்றும் ஈர்ப்பு விசைகள் காரணமாக இதன் சுற்றுப்பாதை திசைமாறி நிலவை நோக்கித் திருப்பப்பட்டது.
இந்த மோதலால் பூமிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என நாசா தெளிவாக அறிவித்துள்ளது. இந்த மோதலின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் சுமார் 60 முதல் 90 அடி அகலமும், 12 முதல் 16 அடி ஆழமும் கொண்ட புதிய பள்ளம் உருவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த மோதலினால் நிலவில் எழும்பும் தூசிப் படலம் மற்றும் அதிர்வலைகளை நாசாவின் 'லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர்' உள்ளிட்ட விண்கலங்கள் ஆய்வு செய்யவுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire