Paristamil Navigation Paristamil advert login

துபாயில் தொழிற்சாலை பகுதியில் ஏற்பட்ட 7 குண்டு வெடிப்புகள்

துபாயில் தொழிற்சாலை பகுதியில் ஏற்பட்ட 7 குண்டு வெடிப்புகள்

5 ஆவணி 2026 புதன் 14:58 | பார்வைகள் : 612


துபாயின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜெபெல் அலி தொழிற்சாலை மண்டலம் 05.-8.2026 அதிகாலை பல குண்டு வெடிப்புகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

20 நிமிடங்களில் குறைந்தது ஏழு வெடிப்புகள் நிகழ்ந்ததாக அரபு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெடிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டதால், அந்த பகுதியில் பெரிய அளவில் புகை மூட்டம் பரவியது.

சம்பவம் நடந்த இடம் ஜெபெல் அலி துறைமுகம் மற்றும் ஜெபெல் அலி சுதந்திர வணிக மண்டலம் (Jafza) அருகே அமைந்துள்ளது. இது 1985-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கும் முக்கிய வணிக மையமாகும்.

வெடிப்புகளுக்குப் பிறகு தீ பரவிய நிலையில், அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுவரை எந்த அமைப்பும் சம்பவத்திற்குப் பொறுப்பேற்கவில்லை.

மேலும், தீ விபத்தை படம் பிடித்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெபெல் அலி துறைமுகம், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த சம்பவம் உலகளாவிய வணிகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர், “ஹார்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும். இல்லையெனில் ஈரான் கடுமையாக தாக்கப்படும்” என எச்சரித்தார்.

இந்த வெடிப்புகள் மற்றும் தீ விபத்து, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றங்களை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் உள்ளது.