பார்லி முடக்கம் விரைவில் முடிவுக்கு வரும்; கிரண் ரிஜிஜூ தகவல்
6 ஆவணி 2026 வியாழன் 10:55 | பார்வைகள் : 496
பார்லியை எதிர்க்கட்சிகள் முடக்குவது விரைவில் தீர்க்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுலுடனான சந்திப்பிற்கு பிறகு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் பார்லியை தொடர்ந்து முடக்கி வருகின்றன. விவாதம் நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறியும், எதிர்க்கட்சிகள் அதனை ஏற்க மறுத்து அவை நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றன.
இந்த நிலையில், மத்திய பார்லி விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை இன்று சந்தித்து பேசினார். கடந்த 10 நாட்களில் இருவரும் சந்திக்கும் 2வது சந்திப்பு இதுவாகும். சுமார் 50 நிமிடங்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, மாணவர்கள் போராட்டத்தில் பெல்லட் குண்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை என்றும், அவர் பார்லியில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றே வலியுறுத்தி வருவதாக ராகுல் கூறியுள்ளார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த கிரண் ரிஜிஜூ, 'இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. விரைவில் பார்லியில் நிலவும் முடக்கம் விரைவில் தீர்க்கப்படும்,' என்று கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire