செப்டம்பர் 8ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்
6 ஆவணி 2026 வியாழன் 12:00 | பார்வைகள் : 477
செப்., 8ம் தேதி வரை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்; நாளை மறுநாள் பட்ஜெட் மீது விவாதம் நடக்கும் என சபாநயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது: நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆகஸ்ட் 7ம் தேதி, மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
ஆகஸ்ட் 7, 10, 11ல் பட்ஜெட் மீது விவாதம் நடக்கும். ஆகஸ்ட் 12ம் தேதி பட்ஜெட் மீதான பதிலுரை; சுதந்திர தின ஏற்பாடுகள் காரணமாக ஆகஸ்ட் 13, 14, 15ல் கூட்டத்தொடர் கிடையாது.
செப்.7ல் காவல், தீயணைப்பு, மீட்புப் பணிகள் மீதான பதிலுரையில் முதல்வர் விஜய் பேசுகிறார். காலை 9.30க்கு தொடங்கும் சட்டசபை கூட்டம் தேவைப்பட்டால் மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் உறுதியாக நேரலை செய்யப்படும்.
உலக முழுவதும் உள்ள மக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஜேசிடி பிரபாகர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire