டாஸ்மாக் கடைகளை மூட கோரி முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்
6 ஆவணி 2026 வியாழன் 13:23 | பார்வைகள் : 487
தமிழகத்தில், மேலும் 129 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்' என, முதல்வர் விஜய்க்கு, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். அண்ணாமலையின் கடிதத்தை, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பை சேர்ந்த, கரு.நாகராஜன், நாச்சியப்பன் ஆகியோர், முதல்வரின் செயலரிடம் வழங்கினர்.
அண்ணாமலையின் கடிதம்: தமிழகத்தில், தங்க சந்தையின் மதிப்பு ஆண்டுக்கு 90,000 கோடி ரூபாய். அதேநேரத்தில், டாஸ்மாக் வருவாய் 50,000 கோடி. கடந்த 2019ல், 14.2 சதவீதமாக இருந்த மது அருந்துவோர் எண்ணிக்கை, 2024ல், 23.7 சதவீதமாகி உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில், 10 சதவீதமாக உயரும். இது குடும்ப சேமிப்பை பாதித்து, குடும்பங்களின் நிம்மதியை கெடுக்கும்.
வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றின், 500 மீட்டர் சுற்றளவில் உள்ள, 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடு வதாக, கடந்த மே, 12ம் தேதி அறிவித்தது வரவேற்கத்தக்கது.
ஆனால், குறிப்பிட்ட சுற்றளவில் கடைகள் மூடப்பட்டிருக்கிறதா என ஆய்வு நடத்தியதில், 129 கடைகள் இன்னும் மூடவேண்டி உள்ளது. அந்த பட்டியலை இணைத்துள்ளேன். எனவே அதை பரிசீலனை செய்து, அந்த கடைகளை மூடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire