மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சாங் சூ கி தொடர்பில் ஒரு புதிய தகவல்
6 ஆவணி 2026 வியாழன் 08:20 | பார்வைகள் : 591
மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சாங் சூ கியின் நிலை குறித்து காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சாங் சூ கி எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமலேயே இருந்து வந்தது.
2021ஆம் ஆண்டு மியான்மரில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து மியான்மர் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஆங் சாங் சூ கி (81).
அவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியாத நிலையில், அவரது உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துவந்தார்கள்.
பின்னர், மே மாதம், அவர் சிறைச்சாலையிலிருந்து வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. ஆனாலும், அவரை யாரும் பார்த்ததாக தகவல் இல்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம், அதாவது, ஆகத்து மாதம் 3ஆம் திகதி, அவர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி ஒருவரை சந்திக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆங் சாங் சூ கி, மியான்மருக்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதியான Arnaud de Baecque என்பவருடன் கைகுலுக்குவதை அந்த புகைப்படம் காட்டினாலும், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire