Paristamil Navigation Paristamil advert login

மின்னல் தாக்கி உயிரிழந்த கால்பந்து வீரர்! பலர் காயம்

மின்னல் தாக்கி உயிரிழந்த கால்பந்து வீரர்! பலர் காயம்

6 ஆவணி 2026 வியாழன் 12:16 | பார்வைகள் : 482


தாய்லாந்தில் மின்னல் தாக்கி கால்பந்தாட்ட வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாய்லாந்தின் நரதிவாட் மாகாணத்தில் நடைபெற்ற நட்பு ரீதியான கால்பந்து போட்டி ஒன்றில், மின்னல் தாக்கியதில் 24 வயது கால்பந்து வீரர் சஃப்வான் அவாயே (Sofwan Awae) உயிரிழந்தார்.

இந்த சம்பவம் சுங்காய் கோலோக் நகரில் உள்ள சாந்திபாப் மைதானத்தில், மாலை 5.30 மணியளவில் கடும் மழை பெய்துகொண்டிருந்தபோது நடந்தது.

Abu x Nong Sirin மற்றும் SAMCOLT அணிகள் இடையே நடைபெற்ற Golok FA Cup அரையிறுதி போட்டியின் போது, திடீரென மைதானத்தில் மின்னல் விழுந்தது. அதனால் வீரர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

சஃப்வான், Yala FC அணிக்காக விளையாடியவர். அவர் முன்னதாக Pattani FC-க்கும் விளையாடியிருந்தார். சில நாட்களுக்கு முன்பே Yala FC-யுடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

மின்னல் தாக்கியதும் அவசர மருத்துவ குழு விரைந்து உதவி செய்தது. ஆனால் கடுமையான காயங்களால் சஃப்வான் உயிரிழந்தார். மேலும், 22 வயது மலேசிய வீரர் Mohammad Alif Ezzahan Zulkifli உட்பட பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, உலகம் முழுவதும் ரசிகர்கள், நண்பர்கள், கால்பந்து சங்கங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து கால்பந்து சங்கமும், யாலா FC-யும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளன. சஃப்வானின் மரணம் கால்பந்து உலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.