Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் இயக்குனராக களம் காணும் மது சி.நாராயணன்!

 மீண்டும் இயக்குனராக களம் காணும் மது சி.நாராயணன்!

6 ஆவணி 2026 வியாழன் 16:59 | பார்வைகள் : 488


‘கும்பளங்கி நைட்ஸ்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் மது சி. நாராயணன், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். ஷ்யாம் புஷ்கரன் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார்.

கும்பளங்கி பகுதியை மையமாகக் கொண்டு குடும்ப உறவுகள் மற்றும் காதலை உணர்ச்சிப்பூர்வமாக சித்தரித்த ‘கும்பளங்கி நைட்ஸ்’, வெளியான போது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் அந்த படத்தில் நடித்த பல நடிகர்களின் கேரியருக்கும் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

அந்த வெற்றிக்குப் பிறகு மது சி. நாராயணன் புதிய படம் எதையும் இயக்காமல் இருந்தார். தற்போது அவர் நடிகர் நஸ்லனை கதாநாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் தொடங்கியது. இயக்குநரும் நடிகருமான திலீஷ் போத்தன், படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். நஸ்லனின் சமீபத்திய வெற்றிகளைத் தொடர்ந்து, இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.