கோதாவரி- காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்
7 ஆவணி 2026 வெள்ளி 10:56 | பார்வைகள் : 513
கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழகம் இயல்பாகவே நீர் வளங்களில் பற்றாக்குறை கொண்டதாக உள்ளது. தனது நீர்த் தேவைகளில் 30 % அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களை சார்ந்துள்ளது. நிலத்தடி நீர் வளமும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டும் அளவிற்கு பயன்படுத்தப்பட்டு, பல பகுதிகளில் அது அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் நிலை தொடர்கிறது.
தமிழகத்தின் நீர்வளங்களை பெருக்குவதற்காக கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் திகழ்கிறது. தமிழக மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான அதிகரித்துவரும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை செயல்படுத்துவது அவசியம். இதனால் உபரியாக செல்லும் வெள்ள நீர், பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு திருப்பி விட வழிவகுக்கும்.
தேசிய நலனை கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமான கலந்து ஆலோசனை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் வாயிலாக மாநிலங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை தீர்த்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூக பொருளாதார நன்மைகளைக் கருத்தில் கொண்டு கோதாவரி - காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட அதற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் விஜய் தெரிவித்து உள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire