வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னென்ன?
7 ஆவணி 2026 வெள்ளி 13:34 | பார்வைகள் : 435
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் 5-ந்தேதி தாக் கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பல் வேறு வாக்குறுதிகளை விஜய் அளித்து இருந்தார். எனவே பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் நேற்று (05.08.2026) தாக்கல் செய்தார்.
இதில், ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இந்தநிலையில், த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று (06.05.2026) தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில் விவசாய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா? விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் இருக்குமா? என்ற வகையில் விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விவசாயிகள், ஏற்றுமதியாளர்களின் கருத்துக்களை பெற்று நிதிநிலை அறிக்கை. விவசாயிகளுக்கான முன்னோடி திட்டங்களுடன் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு.சிஎம் வகுத்துக் கொடுத்த சீரிய தொலைநோக்கு திட்டங்களுடன் நிதிநிலை அறிக்கை. செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் தொடர்வதோடு, புதிய திட்டங்கள் அறிமுகம். வேளாண்மை பாதித்தால் எந்த துறையும் செயல்பட முடியாது என்று கூற்றுக்கு ஏற்ப பட்ஜெட் - அமைச்சர் வினோத்
மண்ணின் வளத்தை பாதுகாக்க” தமிழ்நாடு மணவள பாதுகாப்பு இயக்கம் -ரூ.122.51 கோடி ஒதுக்கீடு
* மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு
* சேவைகள் ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி தொடங்கப்படும். அதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு
* உயிர்ம உரப்பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை
* விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு
* உழவர் ஐடி பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டை
* இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு
* மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு
* மக்காச்சோள உற்பத்தி - ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு
* தொழில்நுட்பமும், பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
* 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு
* தொழில்நுட்பமும், பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
* மழை வெயிலிலிருந்து விளை பொருட்களை பாதுகாக்க 43,500 தார்பாய்கள் திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
* சாமை, தினை, வரகு, குதிரை வாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம் அமைக்கப்படும். இத்திட்டதிற்காக ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு'
* கருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு
* விதை சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு
* 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு
* சிறிய தளிர்..பெரிய ஆரோக்கியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு
* வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
* மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்காக அஞ்சலை அம்மாள் பெயரில் விருது வழங்கப்படும்.
* பனை நடுவோம். பலன் பெறுவோம் என்பதன் அடிப்படையில் பனை பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு
* தரமான பருத்தி உற்பத்தியை பெருக்கிட ஏதுவாக பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு
* தென்னை சார்ந்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய ஏதுவாக தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கீடு
* விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமைக்காக வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு
* அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ.2.3 கோடி ஒதுக்கீடு
* நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு
* வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும்
* 1,720 ஏக்கரில் 1.51 கோடியில் மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம்
* 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும் 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் தூர்வாருதல் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு
* வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைத்திட 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு
* இ- வாடகை 2.0 செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை வலுப்படுத்த, 463 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்படும்
* ஆயிரம் ஏக்கர் பாசனம் பரம்பை உருவாக்கிட பொதுப்பிரிவைச் சார்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் அமைத்தல் அதிகபட்ச மானியம் 60% ரூ.6 கோடி ஒதுக்கீடு
* 2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகள் ரூ.4.80 கோடி ஒதுக்கீடு
* திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் ரூ.4.6 கோடி மதிப்பில் புதிய வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது
* கியூ ஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire