சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக முடிந்த நாசா வீரர்களின் நடைபயணம்!
7 ஆவணி 2026 வெள்ளி 13:25 | பார்வைகள் : 407
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருக்கும் நாசா விண்வெளி வீரர்கள், விண்வெளி நிலையத்தின் வெளிப்புறப் பகுதியில் வெற்றிகரமாக நடந்து சென்று பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
நாசாவின் விண்வெளி வீரர்களான அனில் மேனன் மற்றும் ஜெசிக்கா மெய்ர் ஆகியோர் இந்த விண்வெளி நடைபயணத்தில் (Spacewalk) பங்கேற்றனர்.
அனில் மேனனுக்கு இதுவே முதலாவது விண்வெளி நடைபயணம் என்றும் ஜெசிக்கா மெய்ருக்கு இது 6வது விண்வெளி நடைபயண நிகழ்வு என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையம் தொடங்கப்பட்டதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 281-வது விண்வெளி நடைபயணம் இதுவாகும்.
இலங்கை நேரப்படி நேற்று 06.07.2026 மாலை 6:30 மணிக்குத் தொடங்கிய இந்த நடைபயணம், இரவு 12:30 மணிக்கு முடிவடைந்தது. வீரர்கள் இருவரும் மொத்தம் 6 மணித்தியாலங்கள் 27 நிமிடங்கள் விண்வெளியில் செலவிட்டு விண்வெளி நிலையத்தின் வெளிப்புறக் கட்டமைப்புகளைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 13ஆம் திகதி மற்றும் 25-ஆம் திகதி ஆகிய நாட்களில் மேலும் இரண்டு முறை விண்வெளி நடைபயணம் மேற்கொண்டு பராமரிப்புப் பணிகளைத் தொடர நாசா திட்டமிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire