Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் டால்பின் புயல் - 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம், 500 விமானங்கள் ரத்து

ஜப்பானில் டால்பின் புயல் - 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம், 500 விமானங்கள் ரத்து

7 ஆவணி 2026 வெள்ளி 14:37 | பார்வைகள் : 552


ஜப்பானை நெருங்கி வரும் டால்பின் புயல் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் டால்பின் புயல் நெருங்கி வருவதால், அதிகாரிகள் அவசர வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

காகோஷிமா மற்றும் ஒகினாவா மாகாணங்களில் சுமார் 2,60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த புயல் Category 1 வகை புயலாகும். அதிகபட்சமாக 144 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. 

சில இடங்களில் 198 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல் காரணமாக 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா (Toyota) நிறுவனம் தனது 9 தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

புயல் தாக்கம் ஒகினாவா மற்றும் கியுஷூ தீவுகள் முழுவதும் பரவியுள்ளது.

கடந்த வாரம் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட குமமோட்டோ மாகாணம் இன்னும் பாதிப்பிலிருந்து மீளவில்லை. அங்கு 6,700 பேர் இன்னும் வெளியேற்ற முகாம்களில் தங்கியுள்ளனர்.

மேலும், புயலுடன் கூடிய மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்பதால் வெப்பவாதம் (Heatstroke) அபாயமும் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.