ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு தலையீட்டை சகித்துக்கொள்ள மாட்டோம்: அமைச்சர் எச்சரிக்கை!!
7 ஆவணி 2026 வெள்ளி 15:37 | பார்வைகள் : 1652
வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயெல் பரோ, ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில், பிரான்சின் ஜனநாயக விவாதத்தில் எந்தவொரு வெளிநாட்டு தலையீட்டு முயற்சியையும் அரசு சகித்துக்கொள்ளாது என்று எச்சரித்துள்ளார். பல சாத்தியமான ஜனாதிபதி வேட்பாளர்களை குறிவைத்து ரஷ்ய ஆதரவு வலையமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னாள் பிரதமர் எட்வார்ட் பிலிப் (Horizons கட்சி) , அவரது உடல்நிலை குறித்து அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டதன் மூலம் குறிவைக்கப்பட்டார். அதேபோல், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் Raphaël Glucksmann மற்றும் அவரது துணைவியார் Léa Salamé, ஆகியோர் பற்றியும் பொய்யான குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டன. முன்னாள் பிரதமர் கப்ரியேல் அத்தால் Parkinson (நரம்பணுக்கள் படிப்படியாக அழிந்துபோவதால் ஏற்படும் ஒரு நாள்பட்ட மற்றும் நரம்புச்சிதைவு மூளை நோயாகும்) நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தவறான தகவல் வெளியிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் போதிய கடுமையைக் காட்டவில்லை என்று ஜோன்-லூக் மெலன்சோன் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த பரோ, ஒரு வெளிநாட்டு அரசியல் தலைவர் மற்றொரு நாட்டின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது மட்டும் வெளிநாட்டு தலையீடாகக் கருதப்படாது என்று விளக்கினார். உதாரணமாக, எலான் மஸ்க், பிரான்ஸ் பசுமைக் கட்சித் தலைவர் Marine Tondelier மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
வெளிநாட்டில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட செய்திகளை இணையத்தில் ஒருங்கிணைந்த முறையில் பரப்பி, பிரான்சின் ஜனநாயக விவாதத்தையும் தேர்தலையும் பாதிக்க முயற்சிப்பதே உண்மையான அச்சுறுத்தல் என்று பரோ தெரிவித்தார். இத்தகைய முயற்சிகளைத் தடுக்க பெரிய இணைய தளங்களை ஒழுங்குபடுத்துவது தீர்வின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire