Paristamil Navigation Paristamil advert login

யாழில் மன விரக்தியில் முதியவர் எடுத்த விபரீத முடிவு

யாழில் மன விரக்தியில் முதியவர் எடுத்த விபரீத முடிவு

7 ஆவணி 2026 வெள்ளி 19:00 | பார்வைகள் : 721


யாழில் வியாழக்கிழமை மன விரக்தியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். கைதடியைச் சேர்ந்த கனகசபை அருமைரட்ணம் (வயது 80) என்ற முதியவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் கைதடி பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த நிலையில் மனவிரக்தி காரணமாக தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.

பின்னர் அவர் தூக்கில் தொங்கியதை பார்த்த உறவினர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

அதன்பின்னர் சடலத்தை மீட்ட பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொண்டு சென்றனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி.அன்ரலா மேற்கொண்டார். விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.