நிலவில் வெடித்து சிதறப்போகும் சந்திரயான்-3 - விஞ்ஞானிகள் முன்வைத்த காரணம் என்ன?
22 ஐப்பசி 2023 ஞாயிறு 08:22 | பார்வைகள் : 8877
நிலவின் தென் துருவத்தில் உறக்க நிலையில் இருக்கும் சந்திரயான் -3 வெடித்து சிதறும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது.
இந்த விண்கலனானது பூமியிலிருந்து சந்திரனுக்குமான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டு ஆகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து தனது பணியையும் வெற்றிகரமாக செய்து வந்து, தற்போது உறக்க நிலையில் இருந்து வருகின்றது என்று யாரும் அறிந்ததே.
விக்ரம் லேண்டர் மீண்டும் எப்போது தனது பணியை ஆரம்பிக்குமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் சந்திரயான் -3 இல் இருந்து எந்த ஒரு சிக்னலும் கிடைக்கவில்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் சந்திரயான் -3 குறித்து விஞ்ஞானிகள் ஒரு தகவலை தெரிவித்துள்ளனர்.
நிலவில் உள்ள சந்திரயான் 3 லேண்டர் மற்றும் ரோவர் விரைவில் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவுக்கு வளிமண்டலம் கிடையாது. இதனால் அதன் மேற்பரப்பில் ஏராளமான எரிகற்கள் வந்து விழும். ஆகவே ஒரு எரிகல் இந்த லேண்டர் மீது விழுந்தால் இது வெடித்து சிதறிவிடும்.
இதுபோன்று சூழ்நிலையில் அமெரிக்காவும் இருந்துள்ளாதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire