பிரித்தானிய மன்னர் சார்லஸ் படத்துடன் பண தாள்கள் வெளியீடு!
13 சித்திரை 2024 சனி 07:08 | பார்வைகள் : 10601
பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார்.
இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன் பிரித்தானிய பணமான பவுண்டு வெளியாகும் என அந்நாட்டு வங்கி அறிவித்தது.
இந்த நிலையில் மன்னர் சார்லஸ் படத்துடன் கூடிய பிரித்தானியா நாட்டின் பவுண்டு தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.
பிரித்தானிய வங்கியின் கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி பக்கிங்காம் அரண்மனைக்கு நேரடியாக சென்று மன்னர் சார்லஸுடம் அதனை காட்டி ஒப்புதலை பெற்றார்.
பிரித்தானிய நாட்டு பணத்தின் தாள்களான 5,10,20 மற்றும் 50 பவுண்டுகளில் மன்னரின் படம் அச்சிடப்பட்டுள்ளன. வரும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் படத்துடன் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பண நோட்டுகளுக்கு பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire