கின்னஸ் உலக சாதனை படைத்த குள்ளமான ஜோடி..!
13 ஆனி 2024 வியாழன் 10:28 | பார்வைகள் : 6088
கின்னஸ் உலக சாதனை அமைப்பு சமீபத்தில் உலகின் குள்ளமான ஜோடியின் திருமணத்தை அங்கீகரித்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள்.
பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீட்டர் (35.54 அங்குலம்) ஆகும். கட்யூசியாவின் உயரம் 91.13 சென்டி மீட்டர் (35.88 அங்குலம்) ஆகும்.
இருவருமே எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள் ஆவார்கள். சமூக வலைதளம் மூலம் நட்பான இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு சந்தித்து கொண்டனர்.
அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முறை சந்தித்து பேசிய அவர்கள் தங்களது 31-28 வயதில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என இவர்களை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்து, தங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire