அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் பிரான்சின் எதிரி ஆன கதை..!!
2 வைகாசி 2018 புதன் 12:30 | பார்வைகள் : 24061
இப்படியெல்லாமா நடக்கும்... என ஆச்சரியப்படுத்தும் விதமான சம்பவம் ஒன்று கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகிறது.
1994 ஆம் ஆண்டு இணையத்தளங்கள் (www) அறிமுகமாகியது. அப்போது 'டொமைன்' என சொல்லப்படும் இணையத்தளத்தின் பெயரை பலர் பணம் செலுத்தி தங்களுக்கு உரிமையாக்கினார்கள்.
பிரெஞ்சு அரசு சுதாகரிக்கும் முன்னர், 'www.france.com' எனும் முகவரியை, பிரான்சில் பிறந்த அமெரிக்கர் ஒருவர் சொந்தமாக்கிக்கொண்டார். இது இடம்பெற்றது 1994 ஆம் ஆண்டு.
பின்னர், பிரெஞ்சு அரசு தமக்கென ஒரு இணையத்தளம் வேண்டும் என சிந்தித்தபோது, அதனால் www.france.fr எனும் முகவரியைத் தான் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
.fr என்பது பிரான்சுக்கு மட்டும் சொந்தமான உள்நாட்டு முகவரியாகும். ஆனால் சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் .com கைமீறி போயிருந்தது.
குறித்த அமெரிக்கவாசியை தேடி கண்டுபிடித்து பேரம் பேசி பார்த்தது அரசு.. சரிப்படவில்லை. பணம் தருவதாக கேட்டுப்பார்த்தது.
இந்த நீண்ட வருட 'சிக்கல்' இதுவரை தீர்ந்ததா... என்றால் இல்லை...
சமீபத்தில், கோவம் கொண்ட பிரெஞ்சு அரசு, www.france.com எனும் இணையத்தளத்தை முடக்கியது. France எனும் வார்த்தையை பயன்படுத்த அனுமதி இல்லை என பிரெஞ்சு அரசு அறிவித்தது.
அந்த முகவரியின் சொந்தக்காரர், அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 'டொமைன்'னை யார் முதலில் வாங்குகிறார்களோ, அவர்களுக்கே அது சொந்தம் என்பதுதான் பொது விதி. நான் வாங்கியது எனக்கே சொந்தம் என தெரிவித்த அவர், பிரெஞ்சு அரசின் மீதும், வெளிநாட்டு அமைச்சர் மீதும் வழக்கு தொடர்ந்தார்.
தீர்ப்பு யார் பக்கம் சாதமாகும் என தெரியவில்லை... ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் அந்த பிரெஞ்சு நபர் மாத்திரம் பிரெஞ்சு தேசத்தின் அறிவிக்கப்படா எதிரி ஆனார்!!
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire