‘லக்கி பாஸ்கர்’ இயக்குநருடன் கைகோக்கும் தனுஷ்?
18 தை 2025 சனி 12:31 | பார்வைகள் : 11530
சமீபத்தில் வெளியான துல்கர் சல்மான் நடித்த 'லக்கி பாஸ்கர்' என்ற திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியிருந்த நிலையில், அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தயாரிப்பாளருக்கும் லாபம் குவிந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில், இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கும் அடுத்த படத்தில் தமிழ் மாஸ் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
வெங்கி அட்லுரி ஏற்கனவே தமிழில் தனுஷ் நடித்த 'வாத்தி' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மீண்டும் அவர் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்திற்கு 'ஹானஸ்ட் ராஜ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. இதே பெயரில் கேப்டன் விஜயகாந்த் நடித்த படம் 1994ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்கி பாஸ்கர்' என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பிறகு, வெங்கி அட்லுரி இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire