சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறாரா தனுஷ்…?
21 தை 2025 செவ்வாய் 13:11 | பார்வைகள் : 6479
தான் பெரிதும் நம்பிய ‘கங்குவா’ படம் சொதப்பியதால் இப்போது சூர்யா குறுகிய கால படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45’ படத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னர் உடனடியாக அமல் நீரத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து சமீபத்தைய சூப்பர் ஹிட் படமான ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் மாருதி காரின் 769 cc எஞ்சின் உருவாக்கம் பற்றியதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை லக்கி பாஸ்கர் படத்தை தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.
தற்போது இந்த படம் பற்றி மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. தனுஷ் ஏற்கனவே வெங்கட் அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire