‘SK 25’ படத்தின் டைட்டில் இது தானா?
2 தை 2025 வியாழன் 10:23 | பார்வைகள் : 6204
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் அந்த வகையில் இவர், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தின் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதேசமயம் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு தற்காலிகமாக SK 25 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 1965 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணைப்பை மையமாக வைத்து உருவாகி வருவதால் அதை வருடத்தையே படக்குழுவினர் தலைப்பாக வைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் உருவாக இருந்த இந்த படத்திற்கு புறநானூறு என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire