யாழில் நடந்த துயர சம்பவம் - தந்தையின் கவனயீனத்தால் மகன் பலி
4 பங்குனி 2025 செவ்வாய் 07:12 | பார்வைகள் : 12071
யாழ்ப்பாணத்தில் தந்தை ஓட்டிய உழவு இயந்திரத்தினுள் அகப்பட்டு , சிறுவன் உயிரிழந்துள்ள துயர சம்பவம் பதிவாகி உள்ளது.
உடுவில் பகுதியை சேர்ந்த சுன்னாகம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் கல்வி கற்கும் நிகால்தாசன் ஆத்வீகன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை தந்தை பின் நோக்கி செலுத்தும் போது , பின் புறமாக நின்ற சிறுவனின் மீது உழவு இயந்திரம் ஏறியதால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சுன்னாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire