ஹீரோவான விஜே விஷால்
27 தை 2025 திங்கள் 13:56 | பார்வைகள் : 7876
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அதன்மூலம் தங்களுக்கு கிடைக்கும் புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி, சினிமாவில் அடுத்தடுத்த லெவலுக்கு செல்வார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது நம்பிக்கை நாயகர்களாக வலம் வரும் கவின், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் தான். அந்த வரிசையில் விஷாலும் ஹீரோவாகும் முனைப்போடு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார்.
அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு அவருக்கு ஹீரோ சான்ஸ் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் ஆல்பம் பாடல் ஒன்றில் விஷால் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த ஆல்பம் பாடலை சனோஜ் இயக்கி உள்ளார். இந்த ஆல்பம் பாடலில் விஷால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடித்திருக்கிறார். இந்த ஆல்பம் பாடலுக்கு விக்னேஷ் மகேந்திரன் இசையமைத்து உள்ளார். இந்தப் பாடலை சூப்பர் சிங்கர் பிரபலம் ஆதித்யா பாடி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு விஷால் ஹீரோவாக நடித்துள்ள ஆல்பம் பாடலின் போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரவீந்தர் சந்திரசேகர், அந்த போஸ்டரை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, விஷாலுக்கு வாழ்த்துக்கள், உங்களை பெரிய திரையில் காண ஆவலோடு இருக்கிறேன். நீ எப்பவுமே ஹீரோ தான் டா என பதிவிட்டு தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரின் இந்த பதிவுக்கு கீழ் விஷாலை பாராட்டி சிலர் பதிவிட்டாலும், ஏராளாமானோர் திட்டி பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்தர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire