விஜய் ஆண்டனி சிவகார்த்திகேயன் பட டைட்டிலை வைத்துள்ளாரா ?
29 தை 2025 புதன் 14:51 | பார்வைகள் : 6904
சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ’பராசக்தி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதே டைட்டிலை விஜய் ஆண்டனியின் 25வது படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், விஜய் ஆண்டனி சற்று முன்பு தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய 25 வது படத்தின் டைட்டில் ’சக்தி திருமகன்’ என்று அறிவித்துள்ளார்.
ஆனால், அதே நேரத்தில் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக இருக்கும் நிலையில், தெலுங்கில் இந்த படத்திற்கு ’பராசக்தி’ என்ற டைட்டில் வைத்துள்ளார். தமிழில் ’சக்தி திருமகன்’, தெலுங்கில் ’பராசக்தி’ என்று டைட்டில் வைத்திருந்தாலும், அதனை அவர் தனித்தனியே பிரித்து விளக்கமாக குறிப்பிடவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டிலும் ’பராசக்தி’, விஜய் ஆண்டனியின் படத்தின் டைட்டிலும் பராசக்தியா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பதிவில் விஜய் ஆண்டனி "புயலடிக்கிற வேகத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா, இவன் நடக்குற வேகத்த சகுனிக்கூட்டம் தாங்குமா?" என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ள நிலையில், இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire