தலிபான்கள் தடையை மீறிய ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி! களமிறங்கும் பெண்கள் படை
30 தை 2025 வியாழன் 10:47 | பார்வைகள் : 5556
ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி தடைகளை தாண்டி மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
குறிப்பாக விளையாட்டில் ஈடுபட்ட பெண்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன.
இதனால் பல வீராங்கனைகள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி தனது முயற்சியை கைவிடவில்லை.
இதன் விளைவாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி மீண்டும் ஒரு முறை ஒன்றுகூடி, அவுஸ்திரேலியாவில் நடைபெறும் தொழில்முறை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ளது.
ஆப்கானிஸ்தான் மகளிர் லெவன் அணி, கிரிக்கெட் வித் அவுட் பார்டர்ஸ் லெவன் அணியுடன் ஜனவரி 30-ம் திகதி போட்டியிடுகிறது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைகள் ஃபிரூசா அமிரி மற்றும் நஹிதா சபான் கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் உரிமைகள் மறுக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக எங்கள் அணி இந்தப் போட்டியில் களம் காண்கிறது என தெரிவித்துள்ளார்.
சொந்த நாட்டில் அனைத்தையும் இழந்த நாங்கள் இங்கு ஒன்று கூடியுள்ளது எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.
எங்களது இந்த முயற்சியில் துணை நிற்பவர்களுக்கு நன்றி. இது வெறும் அணி அல்ல. இது ஒரு இயக்கம். மாற்றத்தை முன்னோக்கியுள்ள இயக்கம்" என தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire