விஜய் கட்சியில் இணையும் பிக் பாஸ் தர்ஷா குப்தா?
30 தை 2025 வியாழன் 13:37 | பார்வைகள் : 8923
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவாரா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலை தற்போது பார்ப்போம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமாரன் டைட்டில் பட்டம் வென்றார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை தர்ஷா 21 நாட்களிலே வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது தர்ஷா செய்தியாளர்களை சந்தித்தபோது, "விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவீர்களா?" என்ற கேள்விக்கு, "அவர் கூப்பிட்டால் கண்டிப்பாக இணைந்து கொள்வேன்" என்று கூறினார். "உங்களுக்கு பதவி கொடுத்தால் தான் கட்சிக்கு செல்வீர்களா?" என்ற கேள்விக்கு, "அப்படி எல்லாம் இல்லை. பதவி கொடுத்தால் நல்லது. அப்படி இல்லை என்றாலும், அவர் கூப்பிட்டாலே போதும். அவரது கட்சியில் இணைந்து விடுவேன்" என்று தெரிவித்தார்.
மேலும், விஜய்யின் அரசியல் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கிறது என்று கண்டிப்பாக, "அவர் ஏதாவது மக்களுக்கு நல்லது செய்வார்" என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையே என்ன வித்தியாசம் என்ற கேள்விக்கு பதில் அளித்த தர்ஷா, "கமல்ஹாசன் நிகழ்ச்சியின் போது புத்தகம் போன்ற அறிவார்ந்த கருத்துக்களை தெரிவிப்பார். ஆனால் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை ஜாலியாக மக்களுக்கு என்டர்டைன்மென்ட் செய்யும் வகையில் கொண்டு சென்றார்" என்று தெரிவித்தார்.
மேலும், தற்போது சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும், ஹீரோயின் கேரக்டர், நல்ல கதை அம்சம் உள்ள கேரக்டரை தான் தேர்வு செய்ய இருப்பதாகவும் அவர் இன்னொரு கேள்விக்கு பதில் அளித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire