தனுஷின் அடுத்த படம் தொடர்பில் ஆச்சரிய தகவல்..!
6 மாசி 2025 வியாழன் 14:26 | பார்வைகள் : 6989
தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது "குபேரா" என்ற படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி "இட்லி கடை" என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், மேலும் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் என்பவரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை "கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் குறித்த தகவல்கள் மாறி மாறி வெளிவந்து கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் Connect Media நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், தயாரிப்பு நிறுவனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire