கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து - 35 பேர் படுகாயம
22 பங்குனி 2025 சனி 11:57 | பார்வைகள் : 3846
கொழும்பு – கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
வரகாபொல தும்மலதெனிய பகுதியில் இன்று சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கண்டி – தெஹிவளை மற்றும் கல்முனை – கொழும்பு ஆகிய இரண்டு பஸ்களே கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் பயணித்துள்ளன.
விபத்தின் பின்னர் குறித்த வீதியில் மேலும் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இதன் காரணமாக கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire