இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் காலமானார்!
25 பங்குனி 2025 செவ்வாய் 16:43 | பார்வைகள் : 4615
இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் பாரதிராஜா. சினிமாவில் எத்தனையோ படங்களை இயக்கியுள்ளார். இவரது மகன் மனோஜ் பாரதியும் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தாஜ்மஹால் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான மனோஜ் சமுத்திரம், கடல் பூக்கள், பல்லவன், மாநாடு, விருமன் போன்ற படங்களில் நடித்துள்ளார்
திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மனோஜ் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக மட்டுமின்றி 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தனது அப்பா பாரதிராஜாவையும் நடிக்க வைத்துள்ளார். அதோடு பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார். ஆம், தான் ஹீரோவாக அறிமுகமான தாஜ்மஹால் படத்தில் இடம் பெற்ற ஈச்சி எலுமிச்சி என்ற பாடலையும் பாடியுள்ளார்.
சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக உதவி இயக்குநராக இருந்துள்ளார். அதோடு தனது அப்பா இயக்கிய Final Cut of Director என்ற பாலிவுட் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மேலும், பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பலர் நடித்த எந்திரன் படத்திற்கு உதவி இயக்குநராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனோஜ் மற்றும் நந்தனா தம்பதியினருக்கு ஆர்த்திகா மற்றும் மதிவதானி என்று 2 மகள்கள் இருக்கின்றனர்.நந்தனா ABCD மற்றும் Success போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும், சாதுரியன் படத்தில் மனோஜ் உடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதயத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மனோஜின் உயிரிழப்பு சினிமா பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரப்பரையும் ஏற்படுத்தியுள்ளது. மனோஜ் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire