டாஸ்மாக் வழக்கு; வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தமிழக அரசு மனு
4 சித்திரை 2025 வெள்ளி 08:42 | பார்வைகள் : 4324
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிரான வழக்கை, வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின், 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக, அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
'அமலாக்கத் துறையின் இந்த சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது. விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. வரும் 25ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் தொடர வேண்டாம்' என, அமலாக்கத் துறைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம் சரியில்லை என டாஸ்மாக் சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறையை நீதிபதிகள் கண்டித்தனர்.
அடுத்த சில நாட்களிலேயே, வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு அறிவித்தது. இதையடுத்து, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை வரும் 7ம் தேதிக்கு பட்டியலிட நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire