இளைஞர்களின் கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது; அண்ணாமலை ஆவேசம்
4 சித்திரை 2025 வெள்ளி 10:44 | பார்வைகள் : 3560
தி.மு.க., அரசு செய்த தவறால், இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த 2024ம் ஆண்டுக்கான, சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுகளை நடத்தாமல், இளைஞர்களின் ஒரு ஆண்டினை வீணடித்த திமுக அரசைக் கண்டித்தும், 2025ம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில், 2024ம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம்.
இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டு இருக்கும் காவலர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில், வயது வரம்பு 01-07-2025 தேதி அன்று 30 வயது நிரம்பியிருக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தாமல் பல நூறு இளைஞர்களின் வயது வரம்பு ஒரு ஆண்டு தள்ளிப் போயிருக்கிறது.
தி.மு.க., அரசு செய்த தவறால், இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது. உடனடியாக, காவலர் தேர்வுகளுக்கு, 2024ம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயித்து, மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire