கனடாவின் நீதி அமைச்சராகிய ஹரி ஆனந்தசங்கரி!
15 பங்குனி 2025 சனி 12:48 | பார்வைகள் : 6516
கனடாவின் நீதி அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அட்டர்னி ஜெனரலாகவும், மற்றும் கிரவுன் – இனிஜினஸ் ரிலேஷன்ஸ் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மார்க் கார்னி தனது முதல் அமைச்சரவையை வெளியிடும் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும், இதன் மூலம் இந்தப் பதவியை வகிக்கும் முதல் தமிழ்-கனடியர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.
ஒரு வழக்கறிஞரும் தமிழர் உரிமைகளுக்காக நீண்டகாலமாக வாதிடும் ஆனந்தசங்கரி, இலங்கையில் போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் அழுத்தம் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
கனடாவின் நீதித்துறை அமைச்சராக ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டது கனடாவிலும் உலகளவில் தமிழ் சமூகத்திற்கு ஒரு மைல்கல் ஆகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire