சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்!
14 சித்திரை 2025 திங்கள் 15:42 | பார்வைகள் : 4209
சிம்பு நடிக்க இருக்கும் 49ஆவது படத்தின் இசையமைப்பாளரை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, இந்த படத்தின் இசை பணிகள் தொடங்கியதாக அறிவித்துள்ளார். சிம்புவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் சிம்புவின் பிறந்தநாள் தினத்தில், அவர் நடிக்க இருக்கும் மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது. அதன்படி, சிம்புவின் 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும், 49வது படத்தை ’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாகவும், சிம்புவின் 50வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிம்புவின் 49வது படத்தின் இசையமைப்பாளராக சாய் அபிநயங்கர் என சிம்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சாய் அபிநயங்கர், சூர்யாவின் 45வது படத்திற்கும் இசையமைத்து வருகிறார். அது மட்டுமன்றி, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம், அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் உள்ளிட்ட பல பிரமாண்டமான படங்களுக்கும் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கும் அவரே இசையமைக்க உள்ளார் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படத்தின் இசை பணிகளும் ஆரம்பமாகிவிட்டதாகவும், புத்துணர்ச்சி அளிக்கும் சாய் அபிநயங்கரை தனது படத்திற்கு வரவேற்பதாகவும் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன், சாய் அபிநயங்கர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire