Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கோர விபத்து - 11 பேர் - 35 பேர் படுகாயம்

இலங்கையில் கோர விபத்து - 11 பேர் - 35 பேர் படுகாயம்

11 வைகாசி 2025 ஞாயிறு 07:31 | பார்வைகள் : 4492


நுவரெலியா - கண்டி பிரதான வீதியின், கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

35க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரியவந்துள்ளது. 

விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

காயமடைந்தவர்களை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2